நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நல பாதிப்பால் காலமானார்
Aug 27, 2024, 12:00 IST
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக நடித்து வந்த பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது இறுதி சடங்கு இன்று (ஆக.27) மாலை நடைபெறுகிறது.
யூடியூப் சேனல் ஒன்றின் பிராங்க் வீடியோக்கள் மூலமாக பிரபலமடைந்தவர் பிஜிலி ரமேஷ். தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இயக்குநர் நெல்சனின் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். நட்பே துணை, சிவப்பு மஞ்சள் பச்சை, கோமாளி, ஆடை போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்தச் சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் அவர் பாதிக்கப்பட்டார். அவரது மருத்துவ செலவுக்காக அவரின் குடும்பம் நிதியுதவி வேண்டி இருந்தது. இந்நிலையில், அவர் உயிரிழந்தார். அவரது மறைவு செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.