நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்… திரையுலகினர் இரங்கல்!
May 5, 2025, 13:14 IST
நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் கவுண்டமணி. இவரது காமெடி காட்சிக்காகவே பல திரைப்படங்கள் வெற்றியடைந்துள்ளது. இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியானது ஒத்த ஓட்டு முத்தையா திரைப்படம் வெளியானது.
கவுண்டமணியின் மனைவியின் பெயர் சாந்தி. இவருக்கு வயது 67. இவர்களுக்கு செல்வி, சுமித்ரா என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் இறுதி சடங்குகளுக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.