×

100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ஜெயம் ரவி படம்... தலைப்பு இதுவா ? 

 

 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் நடிகர் ஜெயம் ரவி படத்தின் தலைப்பு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிகராக இருப்பவர் நடிகர் ஜெயம்ரவி. அவர் நடிப்பில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் அடுத்து வெளியான 'அகிலன்' திரைப்படம் போதிய வெற்றியை பெறவில்லை. இதையடுத்து 'சைரன்', 'இறைவன்', 'தனி ஒருவன் 2' ஆகிய படங்களை ஜெயம் ரவி கைவசம் வைத்துள்ளார். 

இந்நிலையில் ஜெயம் ரவியின் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு 'ஜீனி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தை புவனேஷ் இயக்க உள்ளார். இவர் இயக்குனர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.  ஜெயம் ரவியின் 32 வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு இசைபுயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார். 

இந்தப் படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து உள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக  நடிக்க 'உப்பென்னா' படத்தின் மூலம் பிரபலமான கீர்த்தி ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.