நடிகர் ஜீவா நடிக்கும் புதிய படம் -இயக்குனர் யார் தெரியுமா ?
Jul 27, 2025, 08:00 IST
கடந்த வருடம் வெளியான பிளாக் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது .இந்த படம் அமானுஷ்யங்களை பற்றியது .1964ம் ஆண்டு நடப்பது போல கதை ஆரம்பித்து ,தற்போது நடப்பது போல கதை சொல்லிய விதம் மக்களிடையே வரவேற்பை பெற்ற அந்த படத்தில் நடிகர் ஜீவா சிறப்பாக நடித்திருந்தார்
கே.ஜி.பாலசுப்பிரமணி இயக்குனராக அறிமுகமான படம் ‘பிளாக்’. பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் ஜீவா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டைம் லூப் கதையாக உருவானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது மீண்டும் கே.ஜி.பாலசுப்பிரமணி இயக்கத்தில் ஜீவா நடிக்கவுள்ளார். இப்படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஜீவா உடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதன் ஒளிப்பதிவாளராக கோகுல் பினோய் பணிபுரியவுள்ளார். இப்படத்தை கண்ணன் ரவி தயாரிக்க இருக்கிறார்.