×

 'எம்புரான்' படக்குழுவை வாழ்த்திய நடிகர் கமல்ஹாசன்.. மோகன்லால் பகிர்ந்த தகவல் 

 

மோகன்லால் நடித்துள்ள எம்புரான் படக்குழுவை நடிகர் கமல்ஹாசன் வாழ்த்தியதாக நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார். 


நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவான எம்புரான் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் ‘லூசிஃபர்” படத்தின் இரண்டாம் பாகமனா இப்படத்தை   ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.  இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்து உள்ளார். மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து உள்ளனர்.

‘எம்புரான்' படம் வெளியாவதற்கு முன்பே இயக்குனரும், நடிகருமான பிருத்வி ராஜ், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிலையில், 'எம்புரான்' வெளியான முதல் நாளான நேற்று 22 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மலையால சினிமாவில் முதல் நாள் அதிகம் வசூல் செய்த திரைப்படங்களில் முதல் இடத்தை எம்புரான் பிடித்துள்ளது.