‘குடும்பஸ்தன்’ படக்குழுவினரை பாராட்டிய நடிகர் கமல்ஹாசன்!
நடிகர் கமல்ஹாசன் குடும்பஸ்தன் படக்குழுவினரை பாராட்டியுள்ளார். மணிகண்டன் நடிப்பில் உருவாகி இருந்த குடும்பஸ்தன் திரைப்படம் கடந்த ஜனவரி 24ஆம் தேதி திரைக்கு வந்தது. இந்த படத்தை ராஜேஸ்வர் காளிசாமி இயக்கியிருந்தார். சினிமாக்காரன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க வைஷாக் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். குடும்பஸ்தனாக மாறும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை சுவாரஸ்யமாகவும் காமெடியாகவும் திரையில் காட்டி இருந்த படம் தான் குடும்பஸ்தன்.
இந்த படத்தில் நடிகர் மணிகண்டன் வழக்கம்போல் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றுள்ளார். இவருடன் இணைந்து சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த படமானது வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.