×

“போதை என்பது சீரிஸான விஷயம்” - மாணவர்களுக்கு நடிகர் கார்த்தி அட்வைஸ் !

 
போதைப்பொருட்களில் ஆர்வம் காட்டாதீர்கள் என நடிகர் கார்த்தி மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். 

போதைப்பொருட்கள் பயன்படுத்துவது மாணவர்களிடையே நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் சென்னை மெரீனா கடற்கரையில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. அதில் சிறந்து விருந்தினராக கலந்துக்கொண்ட நடிகர் கார்த்தி, மாணவர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார். 

இன்றைய காலக்கட்டத்தில் போதைப்பொருட்கள் அதிக அளவில் புழங்கி வருகிறது. குறைந்த வயதுடையவர்கள் தான் இதை பயன்படுத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் மதுவை பயன்படுத்தும் காலம் மாறி தற்போது பள்ளி மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகிவிட்டனர். 

பள்ளிக்கூட பகுதிகளில் சகஜமாக போதைப்பொருட்கள் விற்கப்படுகிறது. போதைப்பொருட்களை பயன்படுத்துவரும், விற்பவரும் இங்கேதான் இருக்கிறார்கள். அதனால் நாம் ஒன்றிணைந்தால் நிச்சயம் ஒரு மாற்றத்தை கொண்டு வர முடியும். இது சமூகத்தில் சீரியஸான விஷயம். போதைப்பொருள் உள்ளிட்ட விஷயங்களில் ஆர்வம் காட்டுவதை விடுத்து விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் காட்டலாம். பெற்றோர்கள் தான் இளைஞர்களின் நண்பனாக இருக்கவேண்டும். மகிழ்ச்சி, சோகம் என எல்லா தருணங்களிலும் போதைப்பொருள் பயன்படுத்துவதாக இளைஞர்கள் கூறுகின்றனர். மாணவர்களை கவனித்து பெற்றோர் வழி நடத்தவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.