நடிகர் கார்த்தி பிறந்தநாள்... சிறப்பு போஸ்டருடன் வாழ்த்து தெரிவித்த சர்தார் 2 படக்குழு...!
May 25, 2025, 13:00 IST
நடிகர் கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு சர்தார் 2 படக்குழுவினர் சிறப்பு போஸ்டருடன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ’சர்தார். இதை தொடர்ந்து சர்தார் 2 பாகம் உருவாகி வருகிறது.
சர்தார் 2 படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.