×

பூஜையுடன் தொடங்கியது கவினின் அடுத்த படம்... எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் புதிய கூட்டணி !

 

நடிகர் கவினின் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. 

சின்னத்திரையில் பிரபல நடிகராக இருந்தவர் நடிகர் கவின். அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று ரசிகர்களின் அன்பை பெற்று டைட்டில் வின்னரானார். பின்னர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் உருவான ‘டாடா’ படத்தில் நடித்தார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றது. 

இந்த வெற்றிக்கு பிறகு கவினுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் பிரபல டான்ஸ் மாஸ்டர் சதிஷ் இயக்கத்தில்  கவின் அடுத்து நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக ‘அயோத்தி’ படத்தின் மூலம் பிரபலமான ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். 

இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிரூத் இசையமைக்கவுள்ளது கூடுதல் சிறப்பு. ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. கவின், அனிரூத், சதீஷ் ஆகிய இணைந்து பணியாற்றும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.