×

விரைவில் நடிகர் கவினுக்கு திருமணம்.. வெளியானது புதிய தகவல் !

 

நடிகர் கவினுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் இளம் நாயகனாக வலம் வருபவர் கவின். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அவர், 'லிப்ட்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பிறகு ‘ஆகாஷ் வாணி’ என்ற வெப் தொடரிலும், நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ஊர்குருவி’ படத்திலும் நடித்துள்ளார்.

இதற்கிடையே  கவின் நடிப்பில் வெளியான 'டாடா' திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. 'டாடா' படத்தின் வெற்றி கவினை தற்போது அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இதனால் புதிய படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வகையில் பிரபல டான்ஸ் மாஸ்டர் சதிஷ் இயக்கத்தில் கவின் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் நடிகர் கவினுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மணப்பெண் யார், திருமண தேதி, இடம் ஆகியவை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகவுள்ளது. இதற்கிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது இலங்கை பெண்ணாக லாஸ்லியா காதலித்தாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் நிகழ்ச்சி முடிந்த பிறகு அந்த காதல் கைகூடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.