×

நடிகர் அஜித்தின் கார் ரேஸிங் அணி.. ஆர்வத்தில் நடிகர் மாதவன்...! 

 

நடிகர் மாதவன் அஜித்தை புகழ்ந்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர்களில் ஒருவர் நடிகர் அஜித். இவர் கடைசியாக துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. இதற்கிடையில் அஜித் தனது பெயரில் கார் ரேஸிங் அணியை தொடங்கியுள்ளார். 2025 ஜனவரி மாதத்தில் துபாயில் நடக்க இருக்கும் கார் பந்தயத்தில் நடிகர் அஜித் முதன்மை ஓட்டுநராக செயல்பட உள்ளார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கார்பந்தயத்தில் களமிறங்குகிறார் அஜித். அதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் இது தொடர்பான அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் மாதவன் தனது சமூக வலைதள பக்கத்தில் அஜித்தின் கார் ரேஸிங் தொடர்பாக வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

 


அத்துடன், “அஜித் குமார் ரேஸிங் அணி ட்ராக்கில் சீறிப்பாய்வதை பார்க்க மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறேன். என்ன ஒரு வியக்கத்தக்க மனிதர் அஜித். என்ன நடந்தாலும் அவரின் கனவுகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்” என்று பதிவு ஒன்றினை வெளியிட்டு நடிகர் அஜித்தை புகழ்ந்துள்ளார் மாதவன்.