×

விஜயகாந்தை விட்டு விலகாத நடிகர் மன்சூர் அலிகான்

 

நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். இதையடுத்து சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேற்று அவரது உடல் வைக்கப்பட்டு இருந்தது. இன்று காலை முதல் தீவுத்திடலில் அவரது உடல் வைக்கப்பட்டு இருந்தது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து சென்னை தீவுத்திடலில் இருந்து விஜயகாந்தின் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வருகிறது. மாலை 4.45 மணிக்கு தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவரது உடல் இறுதி சடங்குகளுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. 

இந்நிலையில், கேப்டனின் மறைவுச் செய்தி அறிந்த மன்சூர் அலிகான் விஜயகாந்த் இல்லத்திற்கு சென்றார். அங்கு விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர், சாலி கிராமத்தில் இருந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு விஜயகாந்த் உடல் கொண்டு செல்லப்பட்டது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்களின் வெள்ளத்தில் ஊர்ந்து சென்ற வாகனத்துடன் நடந்து சென்றார். பின்னர், விஜயகாந்த் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட இரவு கடந்தும் அவரது உடலை விட்டு கொஞ்சம் கூட நகராமல் இருக்கிறார் மன்சூர் அலிகான்.