×

ஜெயிலருடன் நடிகர் மோகன்லால்...  வைரலாகும் புகைப்படங்கள் !

 

‘ஜெயிலர்’ படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிகர் மோகன்லால் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் உள்ளிட்ட நான்கு மொழி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

இவர்களுடன் தமன்னா, யோகிபாபு. வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.   பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற ஓய்வுபெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வருகிறார். 

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்துடன் மலையாள நடிகர் மோகன் லால் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.