×

கிளாமரில் கலங்கடிக்கும் மிருணாள் தாக்கூர்.. வைரலாகும் புகைப்படங்கள் !

 

 நடிகை மிருணாள் தாக்கூரின் உச்சக்கட்ட கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக மாறிவிட்டார் மிருணாள் தாக்கூர். அவர் நடித்த முதல் படமான ‘சீதாராமன்’ திரைப்படம் ஓவர் நைட்டில் பெரிய அளவில் கொண்டு சென்றுவிட்டது. தெலுங்கு இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த அந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.  

இந்த படத்திற்கு பிறகு நானி நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நானியின் 30வது படமாக உருவாகும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள மிருணாள் தாக்கூரின் சம்பளம் வாயடைக்க செய்துள்ளது. அதன்படி இப்படத்தில் அவர் 6 கோடி சம்பளம் பேசியுள்ளாராம்.

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளான நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் இவ்வளவு சம்பளம் வாங்காத நிலையில் மிருணாள் தாக்கூரின் கேட்டுள்ள சம்பளம் வாயடைக்க செய்துள்ளது. தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தலா 2 படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இதுதவிர மலையாளத்திலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். 

இந்நிலையில் கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் மிருணாள் தாக்கூர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.