நடிகர் நாகார்ஜுனா வீட்டில் அடுத்தடுத்து விஷேசம்.. இளைய மகனுக்கும் விரைவில் டும்.. டும்..டும்..
நடிகர் நாகர்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகர்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, தனது காதலி ஜைனப் ராவ்ஜி என்பவரை திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் என்ற மகிழ்ச்சியான செய்தியை தந்தையான நடிகர் நாகர்ஜுனா சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். நாகர்ஜுனா தனது ட்விட்டர் பக்கத்தில் நிச்சயதார்த்த புகைப்படத்தை பகிர்ந்து, "எங்கள் மகன் Akhil Akkineni அவர்களுக்கும், எங்கள் மருமகள் ஆக இருக்கும் Zainab Ravdjee அவர்களுக்கும் இடையேயான நிச்சயதார்த்தத்தை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்! ஜைனப்பை எங்கள் குடும்பத்தில் வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இந்த இளம் ஜோடிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து, அன்பு, மகிழ்ச்சி மற்றும் வாழ்க்கை முழுவதும் எண்ணற்ற ஆசீர்வாதங்களைத் தந்து வாழ்த்துங்கள்!" என்று குறிப்பிட்டுள்ளார். அகில் அக்கினேனி 2015 ஆம் ஆண்டு "அகில்: தி பவர் ஆஃப் ஜுவா" என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.
அவர் "Hello" மற்றும் "மிஸ்டர். மஜ்னு" போன்ற படங்களிலும் நடித்துள்ளார். ஆனால், அவரது படங்கள் தமிழ்நாட்டில் பெரிதாக வெற்றி பெறவில்லை. இருப்பினும், இந்த நிச்சயதார்த்தம் தெலுங்கு திரையுலகில் பேசு பொருளாகியுள்ளது.நாகர்ஜுனாவின் மூத்த மகன் நடிகர் நாக சைதன்யாவிற்கும் அண்மையில் நடிகை சோபிதா உடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. விரைவில் இருவரின் திருமணம் பற்றிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்.