×

நடிகர் நானி தயாரித்த 'கோர்ட்' பட டிரெய்லர் ரிலீஸ்...!

 

நடிகர் நானி தயாரித்துள்ள 'கோர்ட்' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. 

தெலுங்கு திரையுலகில் முன்னணி இளம் நடிகராக வலம் வருபவர் நானி. இவர் நடிப்பில் வெளியான   'ஷியாம் சிங்கா ராய்', 'அடடே சுந்தரா',   'ஹாய் நான்னா' , சூர்யாவின் சனிக்கிழமை' திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் அவர் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.  நடிகர் சிரஞ்சீவியை வைத்து ஒரு படத்தை தயாரித்து வருகிறார். தற்போது இவர் இயக்குனர் ராம் ஜெகதீஷுடன் இணைந்து 'கோர்ட்' என்ற படத்தை உருவாகியுள்ளார். 

<a href=https://youtube.com/embed/urrUjvUFhxE?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/urrUjvUFhxE/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">
இப்படத்தில் ஹர்ஷ் ரோஷன் மற்றூம் ஸ்ரீதேவி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர் இவர்களுடன் சிவாஜி, சாய் குமார், ரோகினி மற்றும் ஹர்ஷவர்தன் நடித்துள்ளனர். ஹர்ஷ் ரோஷன் இதற்கு முன் நானியின் சரிபோதா சனிவாரம் திரைப்படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. இப்படம் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை மையப்படி கதைக்களம் அமைந்துள்ளது. திரைப்படம் வரும் மார்ச் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. செய்யாத குற்றத்தின் கீழ் காதலனை போக்சோ சட்டம்மற்றும் பல்வேறு சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்கின்றனர். இந்த வழக்கை பிரியதர்ஷி எடுத்து வாதாடுகிறார். இதை மையமாக வைத்து திரைப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வருகிறது.