நடிகர் நானி தயாரித்த 'கோர்ட்' பட டிரெய்லர் அப்டேட்...!
Mar 1, 2025, 19:00 IST
நடிகர் நானி தயாரித்துள்ள 'கோர்ட்' படத்தின் டிரெய்லர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி இளம் நடிகராக வலம் வருபவர் நானி. இவர் நடிப்பில் வெளியான 'ஷியாம் சிங்கா ராய்', 'அடடே சுந்தரா', 'ஹாய் நான்னா' , சூர்யாவின் சனிக்கிழமை' திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் அவர் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். நடிகர் சிரஞ்சீவியை வைத்து ஒரு படத்தை தயாரித்து வருகிறார். தற்போது இவர் இயக்குனர் ராம் ஜெகதீஷுடன் இணைந்து 'கோர்ட்' என்ற படத்தை உருவாகியுள்ளார்.