×

பிரஜன் - வித்யா பிரதீப் இணைந்து நடித்துள்ள ‘D3’.. ஃப்ர்ஸ்ட் லுக்கை வெளியிடும் விஜய் ஆண்டனி !

 

 பிரஜன் நடிப்பில் உருவாகியுள்ள ‘D3’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட உள்ளார். 

சினிமாவில் எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் இளம் ஹீரோக்களில் ஒருவர் பிரஜன். அவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘D3’. இந்த படத்தில் வித்யா பிரதீப் கதாநாயகியாக நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் பாலாஜி இப்படத்தை இயக்கி வருகிறார். 

மேலும் இந்த படத்தில் நடிகர்கள் சார்லி, வர்கீஸ் மேத்யூ, மோகமுள் அபிஷேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீமாஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஜேகேஎம் புரொடக்ஷ்ன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றன. ஸ்ரீஜித் எடவானா என்பவர் இசையமைத்து வருகிறார். 

ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களை வைத்து இப்படம் உருவாகி வருகிறது. உண்மை சம்பவத்தின் அடிப்படையில் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை நடிகர் விஜய் ஆண்டனி  வரும் ஜூலை 28-ஆம் தேதி வெளியிட உள்ளார்.