×

பிரசாந்தின் ‘அந்தகன்’ ஷூட்டிங் தொடங்கியது… சிம்ரனை தொடர்ந்து இணைந்த மற்றொரு நடிகை…

பிரசாந்த் நடிக்கும் ‘அந்தகன்’ படத்தில் சிம்ரனை தொடர்ந்து முக்கிய பிரபலம் ஒருவர் இணைந்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த படம் ‘அந்தாதுன்’. 3 தேசிய விருதுகளை குவித்த இந்த படத்தில் ஆயுஷ்மன் குரானா, ராதிகா ஆப்தே, தபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவான இப்படம் வசூலை வாரிக்குவித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து பல மொழிகளில் இந்த படத்தை ரீமேக் செய்ய இயக்குனர்கள் முயற்சித்து வருகின்றனர்.
 

பிரசாந்த் நடிக்கும் ‘அந்தகன்’ படத்தில் சிம்ரனை தொடர்ந்து முக்கிய பிரபலம் ஒருவர் இணைந்துள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த படம் ‘அந்தாதுன்’. 3 தேசிய விருதுகளை குவித்த இந்த படத்தில் ஆயுஷ்மன் குரானா, ராதிகா ஆப்தே, தபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவான இப்படம் வசூலை வாரிக்குவித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து பல மொழிகளில் இந்த படத்தை ரீமேக் செய்ய இயக்குனர்கள் முயற்சித்து வருகின்றனர். தமிழை பொறுத்தவரை முன்னணி இயக்குனர் தியாகராஜன் இந்த படத்தின் ரீமேக் உரிமையை பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு இந்த படத்தின் தமிழ் ரீமேக் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த படத்திற்கு தமிழில் ‘அந்தகன்’ என்று பெயரிட்டுள்ளதாகவும், நடிகர் பிரசாந்த் ஹீரோவாக நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. ஜெ.ஜெ.பெட்ரிக் இந்த படத்தை இயக்குவதாகவும் முதலில் கூறப்பட்டது.

அதன்பிறகு இந்த படம் குறித்த அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இதையடுத்து கடந்த மாதம் ‘அந்தகன்’ படம் குறித்த அறிவிப்பு மீண்டும் வெளியானது. அதில் படத்தை இயக்குவதாக இருந்த ஜே.ஜே.பெட்ரிக் மாற்றப்பட்டு பிரசாந்தின் தந்தை தியாகராஜனே இந்த படத்தை இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை சிம்ரன், பிரசாந்துடன் இணைந்து நடிக்கிறார். மேலும் கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா, வனிதா விஜயகுமார், லீனா சாம்சன், செம்மலர், பூவையார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் இசையமைக்கிறார். இந்நிலையில் படத்தின் முதல் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. இதில் பிரசாந்த், சிம்ரன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் தற்போது நடிகை ப்ரியா ஆனந்த் இணைந்துள்ளார். இவர், அந்தாதுன் படத்தில் ராதிகா ஆப்தே நடித்த கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.