×

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி!

 

உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று (30.09.2024) இரவு 10 மணி அளவில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிய அவருக்கு, உடல் சோர்வு மற்றும் வயிற்றுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே திட்டமிட்டு மருத்துவரின் ஆலோசனைபடிதான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், திடீரென அனுமதிக்கப்படவில்லை என்றும் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. பயப்படும்படியாக எதுவும் இல்லை என்றும் குடும்பத்தினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

வேட்டையன், கூலி போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து வருவதால், சில தினங்களாகவே அவருக்கு உடல் சோர்வு மற்றும் லேசான நெஞ்சுவலி போன்ற உணர்வு ஏற்பட்டிருந்ததாகவும், அதற்காக அவர் மருத்துவரிடம் கலந்தாலோசித்துள்ளார் என்றும் தெரிகிறது. அப்போது மருத்துவர்கள் பரிந்துரைத்தபடி, தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார் என்று கூறப்பட்டுள்ளது.மருத்துவமனையில் இன்று ரஜினிகாந்திற்கு இதய சிகிச்சைப்பிரிவில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் வெளியான பிறகுதான் அவர் எப்போது வீடு திரும்புவார் என்பது குறித்து தகவல் வெளியாகும்.