அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்!
Feb 25, 2025, 13:30 IST
அரசுப் பள்ளி மாணவர்களை பன்னாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துக்களை கூறியதாக என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அனுப்பப்படுகின்றனர். இந்தமுறை, மாணவர்கள் 52 பேர் மலேசியா அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர்களுடன் இணைந்துகொள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று சென்னை விமான நிலையத்திற்குச் சென்றார். அங்கு நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்த அன்பில் மகேஸ், அவருடன் பேசியது பற்றி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.