×

 'நடிகர் சரவணன்' மீது தலைமை செயலகத்தில் புகார் கொடுத்த அவரது மனைவி.

 

வீட்டை விட்டு வெளியே போகசொல்லி தனது கணவர் தன்னை மிரட்டுவதாக நடிகர் சரவணின் மனைவி தலைமை செயலகத்தில்  உள்ள முதலமைச்சரின் தனி பிரிவில் புகார் கொடுத்துள்ளார்.

நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமானவர் சரவணன். இவருக்கு சூரியஸ்ரீ என்ற மனைவி இருக்கிறார். இந்த நிலையில் தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும் அதனால் தன்னை வீட்டை விட்டு காலிசெய்ய சொல்லி மிரட்டுவதாகவும்  பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியதாவது; “ என்னை சரவணன் காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு எனது நகைகள் விற்று, கொஞ்சம் ரொக்கம் கொடுத்து போரூர் அடுத்த மவுலிவாக்கத்தில் அவர் பெயரில் வீடு ஒன்றை வாங்கினார். தற்போது அவருக்கு ஸ்ரீதேவி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்படவே அவருடன் பக்கத்து தெருவில் குடும்பம் நடத்தி வருகிறார். அதுமட்டுமல்லாமல் என்னிடம் வீட்டை காலிசெய்ய சொல்லி அடிக்கடி சண்டையிட்டு வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்புகூட 20க்கும் மேற்பட்ட ரவுடிகளுடன் வந்து மிரட்டினார். என் நகைகளை வைத்து வாங்கிய வீட்டிலிருந்து என்னை வெளியே போகசொல்லி மிரட்டுகிறார்” என்று தலைமை செயலகத்தில் உள்ள முதல்வர் தனி பிரிவில் புகார் கொடுத்துள்ளார்.