×

உருவ கேலி செய்யக்கூடாது - நடிகர் சதீஷ் 

 

காமெடி நடிகரான சதீஷ் தற்போது ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார். அந்த வகையில் அவரது நடிப்பில் வெளிவந்த நாய்சேகர், ஓமை கோஸ்ட் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் சதீஷ் நடிப்பில் இயக்குநர் ராஜ் சேவியர் இயக்கத்தில்,ஏ ஜி எஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’. இந்த படத்தில் நாசர், சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, ரெஜினா, ஆனந்த்ராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இத்திரைப்படம அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது வருகிறது

இந்நிலையில், நகைச்சுவை என்ற பெயரில் உருவ கேலி செய்யக்கூடாது என்றகொள்கை நிலைப்பாட்டை வைத்திருக்கிறேன் என்று நடிகர் சதீஷ் கூறியுள்ளார்.. நகைச்சுவை நடிகன் நல்ல பன்ச் லைன்களை சொல்ல வேண்டும். சொன்னதையே சொல்லாமல் புதிதாக சொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.