×

சதீஸ் நடிக்கும் கான்சூரிங் கண்ணப்பன்

 

நாய்சேகர், வித்தைக்காரன் ஆகிய படங்களில் நாயகனாக நடித்த நகைச்சுவை நடிகர் சதீஸ் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கிறார். கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. செல்வின் ராஜ் ஜேவியர் இந்த படத்தை இயக்குகிறார். படத்தில் சதீஸ் மட்டுமன்றி ரெஜினா, வெங்கட் மாணிக்கம், நாசர், சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், கிங்ஸ்லி, ஆனந்த்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், படத்திற்கு கான்சூரிங் கண்ணப்பன் என தலைப்பு வைத்து புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.