×

‘டிராகன்’ படத்திற்கு ரிவ்யூவ் கொடுத்த நடிகர் சிம்பு... என்ன சொன்னார் தெரியுமா..? 

 

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டிராகன்’. ஏ.ஜி.எஸ். தயாரித்திருக்கும் இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இப்படம் நாளை(21.02.2025) வெளியாகவுள்ளது.  <a href=https://youtube.com/embed/qIBZlbJ7NUE?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/qIBZlbJ7NUE/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

படத்தின் ட்ரெய்லர் முன்னதாக வெளியான நிலையில் வரவேற்பை பெற்றதோடு விமர்சனத்தையும் எதிர்கொண்டது. டிரெய்லரில் கல்லூரி மாணவராக வரும் பிரதீப் ரங்கநாதன் அரியர் வைத்துக் கொண்டு படிக்காத மாணவராக இருக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் இந்தக் காட்சிகள் மாணவர்களை தவறாக வழி நடத்த தூண்டும் என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் படத்தின் இயக்குநர் ட்ரெய்லரில் வரும் காட்சிகள் வெறும் 10சதவீதம் தான், படம் முழுவதும் அப்படி இருக்காது, அரியர் வைத்திருப்பதால் வரும் எதிர்வினைகள் குறித்து பேசி இறுதியில் ஒரு நல்ல கருத்தை சொல்லியிருக்கிறோம் என அனைத்து பேட்டிகளிலும் சொல்லி வருகிறார்.