×

சிம்பு படத்திற்கு தடை இல்லை – நீதிமன்ற உத்தரவால் மகிழ்ச்சியில் படக்குழு !

சிம்புவின் படத்தை வெளியிட தடையில்லை என நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நடிகை ஹன்சிகாவின் 50வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மஹா’. ஜமீல் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிகர் ஶ்ரீகாந்த்தும் நடித்துள்ளார். எக்ஸெட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதற்கிடையே ‘மஹா’ படத்தை தனக்கு தெரியாமல் ஓ.டி.டியில்
 

சிம்புவின் படத்தை வெளியிட தடையில்லை என நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நடிகை ஹன்சிகாவின் 50வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மஹா’.  ஜமீல் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிகர் ஶ்ரீகாந்த்தும் நடித்துள்ளார். எக்ஸெட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இதற்கிடையே ‘மஹா’ படத்தை தனக்கு தெரியாமல் ஓ.டி.டியில் வெளியிட படத்தின் தயாரிப்பாளர் முயற்சிக்கிறார். அதனால் படத்தை வெளியிட தடைக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குனர் ஜமீல் வழக்கு தொடர்ந்திருந்தார். படத்தை முழுவதுமாக முடித்துவிட்டேன். ஆனால் எனக்கு தெரியாமல் எனது உதவி இயக்குனரை வைத்து புதிய காட்சிகளை படமாக்கியுள்ளனர். மேலும் எனக்கு தரவேண்டிய சம்பள தொகையான 16 லட்சத்தை வழங்க என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம், படத்தின் தயாரிப்பாளர் விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. இதனால் ‘மஹா’ திரைப்படம் வெளியாவதில் சிக்கல் நீடித்து வந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, படத்தின் மேக்கிங் மற்றும் டைட்டில் உள்ளிட்ட விஷயங்களில் இயக்குனருக்கு உரிமை இல்லை என ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. அதனால் இயக்குனர் உரிமைக்கோர முடியாது என கூறி வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார். மேலும் இயக்குனர் ஜமீலுக்கு தரவேண்டிய ஊதியத்தை படத்தின் வெளியீட்டுக்கு முன்பு கொடுக்கவேண்டும் என உத்தரவிட்டார். இதனால் ‘மஹா’ படத்தின் வெளியீட்டில் நீடித்து வந்த சிக்கல் நீங்கியுள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.