×

ஆக்ஷனில் பட்டையை கிளப்பப்போகும் சிவகார்த்திகேயன்.. ‘மாவீரன்’-ல் இணைந்த ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் !

 

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தில் பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

‘மண்டேலா’ இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாவீரன்’. இந்த படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பரத் ஷங்கர் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு மாதத்திற்கு முன்பு தொடங்கியது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அப்போது அஸ்வின் மற்றும் சிவகார்த்திகேயன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. 

இதையடுத்து கடந்த வாரம் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் சண்டை பயிற்சியாளரான யன்னிக் பென் இணைந்துள்ளார். மாவீரனில் இவர் இணைந்தது படத்தின் ஆக்ஷ்ன் காட்சிகளுக்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. சமந்தாவின் ‘யசோதா’ படத்திற்கு யன்னிக் பென் தான் ஆக்ஷன் காட்சிகள் அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.