நடிகர் சிவகார்த்திகேயன் தலசயன பெருமாள் கோயிலில் குடும்பத்துடன் தரிசனம்
Feb 17, 2025, 16:31 IST
மாமல்லபுரத்தில் அமைந்துள்ள தலசயன பெருமாள் கோயிலில் திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன், தனது பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்தினருடன் இன்று சுவாமி தரிசனம் செய்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ தலசயன பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் 63-வது தலமாக விளங்கி வருகிறது. இங்கு, உள்ளூர் மற்றும் வெளிநாட்டிலிருந்து வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் தனது பிறந்தநாளை முன்னிட்டு, குடும்பத்துடன் தலசயனப் பெருமாள் கோயிலுக்கு சுவாமி தரிசனத்துக்காக வந்தார்.