×

‘பென்ஸ்’ படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்...!

 

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் ‘பென்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் சென்ற வீடியோ வெளியாகி உள்ளது. 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினியை வைத்து ‘கூலி’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை அடுத்து கைதி 2 படத்தை கைவசம் வைத்துள்ளார். மேலும் பாலிவுட்டில் ஆமிர் கானுடன் ஒரு படம் பண்ணவுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே லோகேஷ் கனகராஜ் கதையில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பென்ஸ்’. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட், பேஷன் ஸ்டுடியோஸ், தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு ஏப்ரலில் வெளியானது.

பூஜை முடிந்ததும் லோகேஷ் கனகராஜ் கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சிவகார்த்திகேயன் விசிட் அடித்துள்ளார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை படக்குழுவினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இப்படத்தின் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணனின் முதல் படமான ‘ரெமோ’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க விருப்பம் தெரிவித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.