சாய் சுதர்சனை பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்...!
Apr 22, 2025, 15:03 IST
ஐபிஎல் போட்டியில் குஜராத் அணிக்காக விளையாடிய சாய் சுதர்சனை நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா குஜராத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 198 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் குஐராத் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.