'டூரிஸ்ட் பேமிலி' படக்குழுவை பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்...!
May 10, 2025, 18:15 IST
டூரிஸ்ட் பேமிலி படக்குழுவை நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
சசிகுமார், சிம்ரன் மற்றும் பலர் நடித்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் = உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுயிருக்கிறது. இந்த படத்தை அபிஷந்த் ஜீவிந்த் இயக்கியுள்ளார். ஆரம்பத்தில் குறைவான தியேட்டர்கள் கிடைத்தாலும் நாட்கள் செல்ல செல்ல இந்த படத்தை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், கூடுதலாக பல திரையரங்குகளில் இந்த திரைப்படத்தை வெளியிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், 'டூரிஸ்ட் பேமிலி' படத்தை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன், படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இதுதொடர்பான புகைப்படம் வெளியாகி உள்ளது.