×

“ஒரே ஒருவாட்டிண்ணா…….” குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றி நெகிழ வைத்த  'சூரி'.

 

கூட்டத்தில் ஒருவனாக நின்று, இன்று தனக்கான ஒரு கூட்டத்தையே உருவாக்கியவர் நடிகர் சூரி. காமெடியனாக அறிமுகமான இவர் தற்போது  ஹீரோ அவதாரம் எடுத்து பட்டையை கிளப்பி வருகிறார். இந்த நிலையில் தனது கேரவனை சுற்றிப்பார்க்க ஆசைப்பட்ட சிறுவர்களின் ஆசையை நிறைவேற்றி நெகிழ வைத்துள்ளார் சூரி.

வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் அறிமுகமாகி அதில் இடம் பெற்ற பரோட்டா காமெடி மூலமாக பிரபலமானவர்  நடிகர் சூரி. அதிலிருந்து ரசிகர்கள் இவரை பரோட்டா சூரி அன அழைக்க துவங்கினர். தொடர்ந்து ரஜினிகாந்த், அஜித், சூர்யா, விகரம், தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்து அசத்தினார். இப்படி காமெடியனாகவே பார்த்து ரசித்த சூரியை ‘விடுதலை’ படத்தில் கதையின் நாயகனாக சீரியசாக நடிக்க வைத்தவர் இயக்குநர் வெற்றிமாறன். அந்த படத்தை பார்த்த பலரும் அட….. இது நம்ம சூரியா! என வியந்து போனார்கள். அந்த அளவுக்கு இருந்தது சூரியின் நடிப்பு. தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாக்த்திலும், சில படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார் சூரி.