×

வெப் தொடரில் நாயகனாக களமிறங்கும் நடிகர் சூரி.. ?

 

நகைச்சுவை நடிகராக மட்டுமே சூரியை பார்த்து பழகிப்போன  ரசிகர்களை, விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்த சூரி தனது அதிரடியானபரிமாணத்தை மூலம் பார்வையாளர்களை மிரளவைத்தார்.வெற்றிமாறனின் மிரட்டும் திரைக்கதையில் மிகவும் சீரியஸான கதாபாத்திரத்தில் சூரியின் உணர்வுபூர்வமான நடிப்பு படத்தை பார்த்த அனைவரையும் வாய் பிளக்க வைத்தது. விடுதலை படத்தை தொடர்ந்து கருடன் படத்தில் சூரியின் வெறித்தனமான நடிப்பு அவரை தமிழ் சினிமாவின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. தொடர்ந்து இனி ஹீரோ சப்ஜெக்ட் படத்தில் தான் நடிப்பேன் என்று முடிவும் செய்தார் சூரி.விடுதலை 2, கொட்டுக்காளி, ஏழு மலை ஏழு கடல் போன்ற படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு காத்திருக்கிறது. இந்த படங்கள் சர்வதேச விழாக்களில் அங்கீகாரம் பெற்றது குறிப்பிடத்தக்கது.


இதில், கூழாங்கல் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் மிகப்பெரிய கவனம் பெற்ற இயக்குனர் பிஎஸ் வினோத் ராஜ், இவரது இயக்கத்தில், சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்ஷன் தயாரிப்பில் சூரி, அன்னா பெண் நடித்துள்ள படம் கொட்டுக்காளி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்த நிலையில் சூரியின் அடுத்த நகர்வு குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, மதுரையை பின்னணியாக கொண்டு உருவாகும் கதை ஒன்றை நடிகர் சூரி எழுதி வருகிறாராம்.இந்த கதையை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி  இணையத்தொடராக தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இயக்குனர் பிரசாந்த் முருகேசன் இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.முதன் முறையாக வெப் தொடரில் நடிகர் சூரி நாயகனாக அறிமுகமாகும் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளறியுள்ளது.