×

கொடுத்த வாக்கை காப்பாற்றிய நடிகர் சூரி.. என்ன செய்தார் தெரியுமா...?

 

தனியார் தொலைக்காட்சியில் நடன கலைஞர் பஞ்சமி நாயகியிடம் அவரது குழந்தைகளுக்கு காதணி விழாவை நடத்தி தருவதாக அளித்த வாக்குறுதியை சூரி நிறைவேற்றியுள்ளார்.

நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள ‘மாமன்’ திரைப்படம் கடந்த மே 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க குடும்ப உறவுகளை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்திற்கு மக்கல் நல்ல வரவேற்பைக் கொடுத்து வருகின்றனர்.இந்நிலையில் இப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சூரி, அதில் சிறப்பாக நடனமாடிய பஞ்சமி நாயகியின் குழந்தைகளுக்கு காதணி விழா நடத்தப்படவில்லை என்பதை அறிந்துகொண்டு உங்கள் பிள்ளைகளுக்கு தாய் மாமனாக இருந்து காதணி விழாவை நடத்தி வைக்கிறேன் என நிகழ்ச்சி மேடையில் வாக்குறுதி தந்திருந்தார்.

பஞ்சமி நாயகி - மணிகண்டன் தம்பதியருக்கு தர்ஷித், அசோகமித்ரன், ஆதித்யாவர்மா என மூன்று மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் இவர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சந்தவேலூர் பகுதியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் காதணி விழா நேற்று நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட நடிகர் சூரி குழந்தைகளை தாய்மாமன் முறையில் மடியில் அமரவைத்து மொட்டை அடிக்கும் வரையில் உடனிருந்தார் பிறகு குழந்தைகளுக்கு புதிய துணிகள் மற்றும் காதணி விழா சீர்வரிசைகளை வழங்கினார்.அதனைத் தொடர்ந்து ’மாமன்’ திரைப்பட இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜன், நடிகர் சூரி, குழந்தையின் தாய்மாமன் கலைத் தென்றல் என மூவர் மடியிலும் வைத்து பஞ்சமியின் குழந்தைகளுக்கு காது குத்தப்பட்டது. இதனால் பஞசமி நாயகியின் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.