கதை களத்திற்காக படங்களில் போதைப் பொருட்கள் காட்டப்படுகின்றன- நடிகர் சூரி
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி கணேஷ் பொறியியல் கல்லூரியில் திரைப்பட நடிகர் சூரி கருடன் படம் குறித்து கல்லூரி மாணவர்களிடம் நேரில் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சூரி, “வரும் 21ஆம் தேதி கருடன் படம் ஆடியோ ரிலீஸ் ஆக உள்ளது. 31ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது. போதை பழக்கத்திலிருந்து இளைஞர்கள் வெளியே வரவேண்டும். போதை பழக்கத்தால் பல குடும்பங்கள் சீரிழிந்திருக்கின்றன. கதை களத்திற்காக திரைப்படங்களில் போதை பொருட்கள் காட்டப்படுகின்றன. சினிமாவில் நிறைய நல்ல விஷயங்கள் உள்ளன. அதை மட்டுமே மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்
விடுதலை பாகம் 2 ஆகஸ்டு அல்லது செம்டம்பர் மாதத்தில் வெளியாகலாம். இளையராஜாவும், வைரமுத்துவும் கூறிய கருத்துகளை நாமதான் பெரிதாக்குகிறோம். விரைவில் சென்னையில் ஓட்டல் தொடங்க திட்டமிட்டுள்ளேன். கருடன் படத்தில் சூரியை வேறு ஒரு பரிமாணத்தில் பார்ப்பார்கள். நல்ல கதை அமைந்தால் மீண்டும் காமெடியனாக நடிப்பேன். ஹீரோவாக நடிக்கும்போது எனக்கான பொறுப்பு அதிகமாக உள்ளது. விடுதலை பாகம் -1 வெற்றியை விட விடுதலை பாகம் - 2, நான்கு மடங்கு வெற்றியைத் தரும்” என்றார்.