×

"குமரேசன் ரெடி"... 'விடுதலை 2' படத்திற்கு மீண்டும் தயாரான சூரி !

 

'விடுதலை 2' படத்திற்காக நடிகர் சூரி குமரேசனாக மாறிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 

சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த சூரி, பரோட்டா காமெடி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் காமெடியனாக நடித்து வந்த அவர், வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘விடுதலை’ திரைப்படத்தின் மூலம் ஹீரோ அறிமுகமானார். 

இந்த படத்தில் சூரியுடன் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இரு பாகங்களாக உருவாகி வந்த அந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சூரி போலீசாக நடித்து தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி இருந்தார். அதனால் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

ஏற்கனவே இரண்டு பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவு பெற்றப்போதிலும் இரண்டாம் பாகத்திற்கான சில காட்சிகளை மீண்டும் வெற்றிமாறன் எடுத்து வருகிறார். இதற்காக மீண்டும் குமரேசன் கெட்டப்பிற்கு சூரி மாறியுள்ளார். இது குறித்து வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் சூரி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.   ‌