×

நடிகர் சூரியின் அடுத்த பட அப்டேட் நாளை ரிலீஸ்...!

 

நடிகர் சூரியின் அடுத்த பட அப்டேட் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'மாமன்’. லார்க் ஸ்டுடியோ சார்பில் கே.குமார் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக ஐஸ்வர்யா லஷ்மி நடித்துள்ளார். நடிகர் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
லப்பர் பந்து புகழ் ஸ்வஷிகா, கீதா கைலாசம், விஜி சந்திரசேகர், நிகிலா சங்கர், பால சரவணன், பாபா பாஸ்கர் மற்றும் குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் பிரகீத் சிவன் உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் அடுத்த மாதம் 16-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.