×

ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய அப்பா - மகன்... வைரலாகும் நடிகர் ஸ்ரீகாந்தின் குடும்ப புகைப்படங்கள் !

 

 தனது பிறந்தநாளையொட்டி குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை நடிகர் ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் இன்னமும் இளமை மாறாமல் இருக்கும் நடிகர்களுள்‌ ஒருவர் ஸ்ரீகாந்த். சாக்லேட் பாய் நடிகராக இருக்கும் அவர் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான 'ரோஜா கூட்டம்' படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படமே சிறந்த நடிப்பை வெளிப்படுத்த அடுத்த படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். தனது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வைத்துள்ளார். 

தமிழ் மற்றும் தெலுங்கு என  இருமொழியில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'நண்பன்' படத்தில் விஜய்யுடன் இணைந்து சிறப்பாக நடித்தார். தற்போது அவ்வெப்போது சில படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் 'தீன்கிரை', 'எக்கோ'  உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார். 

நடிகை சினேகாவுடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய அவர், தெலுங்கு குடும்பத்தை சேர்ந்த வந்தனா என்ற பெண்ணை கடந்த 2007-ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு அஹானா என்ற மகளும், அகில் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் தனது மகன் அகில் மற்றும் ஸ்ரீகாந்தும் இன்று நாளில் பிறந்தநாள் கொண்டாடினார். இதையொட்டி குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.