நடிகர் சுராஜ் வெஞ்சரமூடின் கதாபாத்திர போஸ்டரை வெளியிட்ட எல் 2 எம்புரான் படக்குழு...
Feb 21, 2025, 16:25 IST
மோகன்லால் நடித்துள்ள 'எல் 2 எம்புரான்' படம் வருகிற மார்ச் மாதம் 27-ந் தேதி வெளியாக உள்ளது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `லூசிபர்'. இந்த படத்தின் மூலம் பிருத்விராஜ் இயக்குனராக அறிமுகமானார். தற்போது, இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு 'எல் 2 எம்புரான்' என பெயரிடப்பட்டுள்ளது. இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.