×

பிரம்மாண்டமான தனி விமானம் வாங்கிய நடிகர் சூர்யா...!

 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சிறுத்தை சிவா இயக்கியுள்ளார்.பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் தான் வெளிவந்து, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அக்டோபர் 10ஆம் தேதி வெளிவரவிருக்கும் கங்குவா திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில், நடிகர் சூர்யா புதிதாக பிரமாண்டமான தனி விமானம் (Private jet) ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Dassault falcon 2000 என்கிற இந்த தனி விமானத்தில் சகல வசதிகளும் இருக்கிறதாம். இந்த விமானம் மதிப்பு ரூ.120 கோடி என சொல்லப்படுகிறது.  

 
தென்னிந்திய சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக இருக்கும் சிரஞ்சீவி, ராம் சரண், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட சிலர் இதுபோன்ற தனி விமானங்களை வைத்துள்ளார்களாம். மேலும் நடிகை நயன்தாராவும் தனி விமானம் ஒன்றை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.