×

அல்லு அர்ஜூன், மாதவனுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து... தேசிய விருதுபெற்ற அனைவருக்கும் பாராட்டு !

 

நடிகர்கள் அல்லு அர்ஜூன், மாதவன் உள்ளிட்ட தேசிய விருதுபெற்ற சாதனையாளர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். 

கடந்த 2021-ஆம் ஆண்டுக்கான 69வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இந்தியாவில் உள்ள 28 மொழிகளில் மொத்தம் 280 திரைப்படங்கள் மற்றும் 23 மொழிகளில் 158 நான் ஃபீச்சர் திரைப்படங்கள் பரிசீலனைக்கு பெறப்பட்டன. தென்னிந்தியாவில் ஆர்.ஆர்.ஆர், புஷ்பா, சார்லி, கடைசி விவசாயி உள்ளிட்ட படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

அதன்படி ‘புஷ்பா’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய அல்லு அர்ஜூனுக்கு சிறந்த நடிகராகவும், தேவி ஸ்ரீ பிரசாத் சிறந்த இசையமைப்பாளராகவும், சிறந்த படமாக ஆர்.ஆர்.ஆர் படமும், சிறந்த பின்னணி இசைக்காக கீரவாணியும், ராக்கெட்ரி படத்திற்காக நடிகர் மாதவனுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தமிழில் சிறந்த படமாக ‘கடைசி விவசாயி’ படத்திற்கும், ‘இரவின் நிழல்’ படத்தில் நடனம் அமைத்த பிரேம் ரக்ஷித்திற்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் விருது அறிவிக்கப்பட்டுள்ள நடிகர்கள் அல்லு அர்ஜூன், மாதவன் உள்ளிட்டோருக்கு நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தேசிய விருதுபெற்ற தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழியினருக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். கடைசி விவசாயி, ஆர்ஆர்ஆர், இரவின் நிழல், ராக்கெட்ரி, புஷ்பா உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

null