×

வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் சூர்யா... வேற லேவலில் உருவாகிறதா ‘சூர்யா 42’ ?

 

‘சூர்யா 42’ படத்திற்காக நடிகர் சூர்யா வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. 

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் ‘சூர்யா 42’ படத்தில் நடித்து வருகிறார்.  யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரித்து வரும் இப்படம் முழுக்க முழுக்க 3டி தொழிற்நுட்பத்தில் உருவாகிறது. இரு பாகங்களாக உருவாகும் இப்படம் மொத்தம் 10 மொழிகளில் தயாராகி வருகிறது. இந்த படத்தில் 13 வேடங்களில் நடிகர் சூர்யா நடிக்கிறார்.

இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் கோவை சரளா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 

வரலாற்று பின்னணியில் உருவாகும் இந்த படத்தின் ப்ரீயட் பகுதிகளின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. பல நகரங்களில் நடைபெற்றுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை மறுநாள் முதல் சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் தொடங்கவுள்ளது. வரும் இரு வாரங்கள் இரவு நேரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. இந்த படத்தில் அதிகமான ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கும் என்பதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக கடுமையாக உடற்பயிற்சியை நடிகர் சூர்யா செய்து வருகிறது. இது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.