×

 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தை பாராட்டிய நடிகர் சூர்யா.. இயக்குனர் நெகிழ்ச்சி... 
 

 

 'டூரிஸ்ட் ஃபேமிலி' படக்குழுவை நேரில் அழைத்து நடிகர் சூர்யா பாராட்டியுள்ளார். 

சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. இப்படம் கடந்த 1-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 



இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து எடுக்கப்பட்டுள்ளது. திரைப்படம் 4 வாரங்கள் கடந்தும் தமிழ் நாட்டில் அதிக ஷோ எண்ணிக்கையுடன் ஓடிக்கொண்டு இருக்கிறது. உலகளவில் 75 கோடி ரூபாய்-க்கு அதிகமாக வசூலை குவித்துள்ளது.  இந்நிலையில்,  'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தை பார்த்த நடிகர் சூர்யா, இயக்குனர் அபிஷன் ஜீவின்ந்த் உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இதுகுறித்து இயக்குனர் அபிஷன் ஜீவின்ந்த் வெளியிட்டுள்ள பதிவில், அதை எப்படி விளக்குவது என்று தெரியவில்லை... ஆனால் எனக்குள் இருந்த ஏதோ ஒன்று இன்று குணமடைந்தது. சூர்யா சார் என் பெயரைக் கூப்பிட்டு, 'டூரிஸ்ட் ஃபேமிலி' எவ்வளவு பிடித்தது என்று கூறினார். என நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.