×

சோளிங்கர் நரசிம்மர் கோவிலில் நடிகர் சூர்யா, சிறுத்தை சிவா சாமி தரிசனம்

 
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் திரையங்குகளில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களையும் தாண்டி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் சூர்யா, கங்குவா இயக்குனர் சிறுத்தை சிவா ஆகியோர் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவிலில் ரோப் கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்றுள்ளனர். கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நடிகர் சூர்யா, இயக்குனர் சிறுத்தை சிவா ஆகியோர் திரைப்படம் வெற்றியடைய வேண்டி மனமுருக லட்சுமி நரசிம்ம சாமியை வழிபட்டனர். பின்னர் அர்ச்சகர்கள் கோவில் பிரசாதம் வழங்கினர். சுமார் 30 நிமிடம் கோவிலில் இருவரும் தரிசனம் செய்தனர்.