×

இயக்குனர் சித்திக்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்திய சூர்யா .‌‌.. குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் !

 

மறைந்த இயக்குனர் சித்திக்கிற்கு நடிகர் சூர்யா இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். 

 மலையாளத்தில் பிரபல இயக்குனராக இருந்தவர் சித்திக். மலையாளத்தை தவிர தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் சிறந்த திரைப்படங்களை இயக்கியுள்ளார். தமிழில் கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் சூப்பர் ஹிட் திரைப்படமான ‘ப்ரெண்ட்ஸ்’ படத்தை இயக்கினார். இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதற்கிடையே கடந்த 7-ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி  மரணமடைந்தார். அவரது திடீர் மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

இதையறிந்த நடிகர் சூர்யா, இயக்குனர் சித்திக் மறைவிற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இயக்குனர் சித்திக்கின் நேரில் சென்ற நடிகர் சூர்யா, இயக்குனர் சித்திக்கின் புகைத்திற்கு மலரஞ்சலி செலுதினார். அதோடு சித்திக் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார்.