×

சிவகுமார் குடும்பத்தில் விரிசலா! சூர்யா செய்த அந்த செயல்; கடுப்பான தந்தை – பயில்வான் ரங்கநாதன் சொன்ன பகீர் தகவல்.

 

நடிகர் சூர்யா தனது தந்தையை விட்டு பிரிந்துவிட்டதாக நடிகரும், யூட்டியூபருமான பயில்வான் ரங்கநாதன் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் நன்கு அறியப்படும்  குடும்பங்களுள் ஒன்று நடிகர் சிவகுமாரின் குடும்பம், இவரது மகன்களான சூர்யா, கார்த்தி இருவரும் கோலிவுட்டின் வெற்று  நாயகன்களாக வலம் வருகின்றனர்.இந்த நிலையில் தனது தந்தையுடன் ஒன்றாக வசித்து வந்த நடிகர் சூர்யா தற்போது அவரை பிரிந்துள்ளதாக பயில்வான் ரங்கநாதன் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சூர்யா, ஜோதிகா காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தின்போதே சிவகுமார் ஜோதிகா சினிமாவில் இனி நடிக்க கூடாது என  நிபந்தனைகளை போட்டிருந்ததாக கூறப்பட்டது. இதனை ஏற்று ஜோதிகாவும் சினிமாவை விட்டு விலகி பல ஆண்டுகள் நடிக்காமல் இருந்தார். குழந்தைகள் தியா, தேவ் நன்கு வளர்ந்துவிட்ட நிலையில் தற்போது சிலகாலமாகதான் சினிமாவில் நடித்து வருகிறார் ஜோதிகா, அதுவும் நல்ல கதையமசம் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

நடிப்பதை கடந்து தயாரிப்பாளராகவும் இந்த தம்பதி வலம் வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் சமீபத்தில் சூர்யா மும்பை விமான நிலைய பார்க்கிங்கை ஏலம் எடுத்து நல்ல லாபம் பார்த்துள்ளார். தொடர்ந்து மும்பையில் இன்னும் சில தொழில்களில் முதலீடு செய்துள்ளார்.   இதனால் மும்பையில் ஒரு வீடு ஒன்றையும் வாங்கி, தனது குடும்பத்துடம் குடியேறிவிட்டாராம் நடிகர் சூர்யா. இந்த விஷயம் சிவகுமாருக்கு சுத்தமாக பிடுக்கவில்லையாம். பாலிவுட் பக்கம் சென்று, சூர்யா அங்கும் கொடி நாட்ட ஸ்கெச் போட்டு வருவதாக சர்ச்சை மன்னன் பயில்வான் ரங்கநாதன் ஊடகம் ஒன்றிற்கு இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.