×

இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் உன்னி முகுந்தன்...
 

 

மலையாளத்தின் முன்னணி நடிகரான உன்னி முகுந்தன் அடுத்து சூப்பர் ஹீரோ படம் ஒன்றின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாக இருக்கிறார்.

‘மார்கோ’ படத்தின் மூலம் இந்தியளவில் அனைத்து மொழிகளிலும் பிரபலமானார் உன்னி முகுந்தன். தமிழில் ‘கருடன்’ படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டார். தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி, நாயகனாக நடிக்கவுள்ளார். சூப்பர் ஹீரோ படமாக உருவாகும் இப்படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.இயக்குநராக அறிமுகமாவது குறித்து உன்னி முகுந்தன் பகிர்ந்த தகவலில், “எனக்குள் இருக்கும் குழந்தை, புராணக் கதைகளை நம்பி வளர்ந்தது. தைரியம், தியாகம் மற்றும் மந்திரக் கதைகளால் ஈர்க்கப்பட்டது. புத்தகங்கள், திரைப்படங்கள், நாட்டுப்புறக் கதைகள், சிறிய அதிரடி கதாபாத்திரங்கள் ஆகியவற்றில் மட்டுமல்ல, என் கனவுகளிலும் என் ஹீரோக்களைக் கண்டேன்.

நான் எனது தெலுங்கு படத்தை முடித்துவிட்டு, அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியாகும் இந்த மலையாளப் படத்தின் பணிகளைத் தொடங்குவேன்” என்று உன்னி முகுந்தன் தெரிவித்துள்ளார்.