×

‘தளபதி விஜய்’னா சும்மாவா!......... – இன்ஸ்டாகிராமில் எகிறும் ஃபாலோவர்ஸ்.

 

தளபதி விஜய்க்கு தென்னிந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி மாஸ் எண்ரி கொடுத்தார். அதன் மூலமாக பல சாதனைகளையும் படைத்து வருகிறார். அந்த வகையில் புதிய சாதனையை படைத்துள்ளார்.

விஜய் தற்போது ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கூட்டணியில் தயாராகும் இந்த படத்திற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்துள்ளனர்.  இந்த நிலையில்தான் விஜய் அதிரடியாக இன்ஸ்டா கணக்கை தொடங்கி அதிரவைத்துள்ளார். கணக்கு தொடங்கிய 99  நிமிடங்களில் 1 மில்லியன் பாலோவர்களை பெற்று அதிவேகமாக 1 மில்லியன் பாலோவர்களை எட்டிய பிரபலங்கள் பட்டியலில் நடிகர் விஜய் மூன்றாவது                 இடம்ப்பிடித்தார்.

அதன்படி இன்று நடிகர் விஜய் இன்ஸ்டாகிராம் கணக்கு தற்போது 60 லட்சம் பாலோவர்ஸ்ஸை கடந்து  அதிவேகத்தில் 6மில்லியன் பாலோவர்ஸ் கொண்ட இந்திய பிரபலம் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். தொடர்ந்து பாலோவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகம் வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் விஜய் புதிய பல சாதனைகளை படைக்க ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.