×

நடிகர் விஜய் வாங்கிய புதிய சொகுசு கார்

 

தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருப்பவர். இவரது திரைப்படங்களுக்கு குட்டி சுட்டிகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிகர்கள். விஜய்யின் நடிப்புக்கு மட்டுமல்ல, அவரது நடனம், ஸ்டைல் மற்றும் குரலுக்கும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். அதில், சினேகா, மீனாட்சி சௌத்ரி, பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்

இந்நிலையில், நடிகர் விஜய் புதிதாக ஒரு சொகுசு கார் வாங்கி இருக்கிறார்.  3 கோடி ரூபாய் மதிப்புள்ள BMW i7 xDrive 60 என்ற காரை விஜய் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.