×

‘சோசியல் மீடியா கிங்’காக மாறிய ‘தளபதி விஜய்’ – ஆல் ஏரியாவிலும்  அய்யா கில்லி டா……

 

தளபதி விஜய் நேற்று இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கியதை அடுத்து தற்போது பல உலக சாதனைகளை படைத்து வருகிறார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தளபதி விஜய்க்கு கோலிவுட் மட்டுமல்லாமல் உலக அளவில் ரசிகர் பட்டாளம் உள்ளது.  இந்த நிலையில் இதுவரை ட்விட்டரில் மட்டும் ஆட்டிவாக இருந்து வந்த விஜய் நேற்று இன்ஸ்டாகிராமில் புதிய கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளார். தொடங்கிய உடன் தனது முதல் பதிவாக ‘லியோ’ பட லுக்கில் சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டேலில் புகைப்படத்தை பதிவிட்டு, ஹலோ நண்பாஸ் & நண்பீஸ் என  பதிவிட்டிருந்தார். இந்த ஒரே பதிவுக்கு மில்லியன் கணக்கில் லைக்குகள் குவிந்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல் மில்லியன் கணக்கில் பாலோவர்கள் பின் தொடர்கின்றனர். இந்த நிலையில் விஜய் படைத்துள்ள சாதனைகளை பார்க்கலாம்.

அதன்படி இன்ஸ்டாகிராமில் அறிமுகமானதும் உலகளவில் அதிவேகமாக 1 மில்லியன் பாலோவர்களை எட்டிய பிரபலங்கள் பட்டியலில் நடிகர் விஜய் மூன்றாவது இடம் பிடித்துள்ளார். இவர் 1 மில்லியன் பாலோவர்களை 99 நிமிடத்தில் எட்டியுள்ளார். இந்த லிஸ்டில் முதல் இடத்தில் 43 நிமிடத்தில் 1 மில்லியனை எட்டி  BTS V என்கிற தென்கொரிய பாடகர் உள்ளார். இரண்டாவதாக 59 நிமிடத்தில் 1 மில்லியன் பாலோவர்களை எட்டி ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி பிடித்துல்ளார். தற்போது விஜயின் கணக்கை 3.9 மில்லியன் மக்கள் பின் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.